செல்சியா மலர் கண்காட்சியில் மன்னர் சார்லஸ் மற்றும் ராணி கமிலா கலந்து கொண்டனர்.
செல்சியா மலர் கண்காட்சி, லண்டனில் உள்ள ராயல் தோட்டக்கலை சங்கத்தால் நடத்தப்படும் ஒரு புகழ்பெற்ற மலர் கண்காட்சி ஆகும்.
இது ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில், குறிப்பாக 20-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை நடைபெறுகிறது. அந்தவகையில், இன்று தொடங்கப்பட்ட செல்சியா மலர் கண்காட்சியில் மன்னர் சார்லஸ் மற்றும் ராணி கமிலா பங்கேற்றனர். தொடர்ந்து விதவிதமான மலர்களை பற்றிக் கேட்டறிந்தனர்.