பயங்கரவாதத்திற்கு எதிரான நிலைப்பாடு குறித்து உலக நாடுகளுக்கு விளக்கம் அளிக்கும் குழுவிலிருந்து யூசுப் பதான் விலகிய நிலையில் அந்த குழுவில் அபிஷேக் பானர்ஜி இடம்பிடித்துள்ளார்.
பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டை உலக நாடுகளுக்கு எடுத்துரைக்க நாடாளுமன்ற குழு அறிவிக்கப்பட்டது.
இந்த குழுவில் திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் அக்கட்சியின் எம்பியும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான யூசுப் பதான் இடம்பெற்றிருந்தார்.
தொடர்ந்து நாங்கள் விரும்பும் பிரதிநிதிகள் மட்டுமே குழுவில் இடம்பெற வேண்டும் என திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கூறியிருந்தது.
இந்நிலையில் உலக நாடுகளுக்குப் பயணம் மேற்கொள்ளும் எம்.பி-க்கள் குழுவில் இருந்து யூசுப் பதான் விலகுவதாக அறிவித்தார்.
அவரின் அறிவிப்பைத் தொடர்ந்து எம்பிக்கள் குழுவில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரும் மம்தா பானர்ஜியின் உறவினருமான அபிஷேக் பானர்ஜி இணைந்துள்ளார்.