கட்சி பிரமுகர்களுக்கு தன்னை இரையாக்க முயன்றதாக மாணவி கூறுவது உண்மைக்கு மாறானது என காவல்துறை தெரிவித்துள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் அரசியல் கட்சியினரின் தலையீட்டால்தான் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என கூறுவது தவறு என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புகார் அளித்த 10ஆம் தேதியே அரக்கோணம் மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
20 வயதுள்ள 20 பெண்கள் தெய்வசெயலின் கொடூர பிடியில் சிக்கி உள்ளதாக தெரிவித்த அப்பெண், அவர்களை பற்றிய தகவல்களை கூறவில்லை என காவல்துறை தெரிவித்துள்ளது.
கட்சி பிரமுகர்களுக்கு இரையாக்க முயற்சிப்பதாக பரவிய தகவலும் உண்மைக்கு மாறானது என காவல்துறை கூறியுள்ளது. மேலும் வழக்கில் விசாரணை நடத்தி, அதன் அடிப்படையில் சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என காவல்துறை தெரிவித்துள்ளது.