எகிப்தின் கெய்ரோவில் பைக்கில் செல்லும் தனது பயிற்சியாளரைப் புறா பின்தொடர்ந்து பறந்து செல்லும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
எகிப்தைச் சேர்ந்த அப்தெல் ரஹ்மான் இஸ்மாயில் என்பவர் பறவை பயிற்சியாளராக இருந்து வருகிறார். இந்நிலையில் இவருக்கும், பாண்ட்க் எனப் பெயரிடப்பட்டுள்ள அவரது வெள்ளைப் புறாவுக்கும் இடையே தனித்துவமான பிணைப்பு ஏற்பட்டுள்ளது.
அவர் கெய்ரோவின் தெருக்களில் பைக்கில் செல்லும்போது, அவருக்குப் பின்னால் பாண்ட்க் நெருக்கமாகப் பறந்து செல்வது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.