தேனி மாவட்டம், போடி மெட்டு அருகே 2 கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் உறவினர் உயிரிழந்தார்.
ராஜேந்திர பாலாஜியின் அக்கா மருமகனான அருண் என்பவர் குடும்பத்துடன் கொச்சினுக்குச் சுற்றுலா சென்றுவிட்டு காரில் திரும்பியுள்ளார். போடி மெட்டு மலைச்சாலை வழியாக சென்றபோது எதிரே வந்த மற்றொரு காருடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் அருண், அவரது மனைவி மற்றும் மற்றொரு காரில் பயணம் செய்த இருவர் உட்பட 4 பேர் படுகாயமடைந்தனர். 4 பேரும் போடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அருண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.