நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் உள்ள மின்வாரிய பொறியாளர் அலுவலகத்தில் ஊழியருக்கு மிரட்டல் விடுத்த தனிநபர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மின்வாரிய ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குளத்துக்காடு பகுதியில் செயல்பட்டு வரும் மின்வாரிய அலுவலகத்திற்கு வந்த பிரகாஷ் என்பவர் தனது நிலத்திற்கு அருகே உள்ள மின்கம்பங்களை அகற்றக் கோரி உதவிப் பொறியாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
மேலும், உதவிப் பொறியாளரைத் தகாத வார்த்தைகளால் திட்டியதுடன் மிரட்டல் விடுத்ததாகத் தெரிகிறது.
இதனை அறிந்த மின்வாரிய ஊழியர்கள் பணியைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், பிரகாஷ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.