திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியில் இருசக்கர வாகனத்தை இருவர் திருடிச்சென்ற சிசிடிவி வீடியோ வெளியாகி உள்ளது.
கன்னக்குருகை மேல் நாச்சிப்பட்டு பகுதியைச் சேர்ந்த தேவராஜ் என்பவர், தனது மனைவியுடன் செங்கம் பகுதிக்குச் சென்றிருந்தார். சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் பின்புறம் உள்ள உணவகத்தில் வாகனத்தை நிறுத்திவிட்டு இருவரும் உணவருந்தச் சென்றிருந்தனர்.
அப்போது வண்டியின் பூட்டை லாவகமாக உடைத்து இருசக்கர வாகனத்தை இருவர் திருடிச் சென்றது அங்கிருந்த சிசிடிவி வீடியோ மூலம் தெரியவந்தது.
செங்கம் பகுதியில் இருசக்கர வாகனங்கள் அதிகளவில் திருடப்படுவதாகவும், எனவே காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.