காரைக்கால்-பேரளம் இடையே புதிதாக அமைக்கப்பட்ட வழித்தடத்தில் ரயில் சோதனை ஓட்டம் நடைபெற்றது.
காரைக்கால்-பேரளம் இடையே கடந்த 1987ஆம் ஆண்டு நிறுத்தப்பட்ட மீட்டர் கேஜ் பாதைக்குப் பதிலாக 23 கிலோமீட்டர் தூரத்திற்கு புதிய ரயில் பாதை அமைக்கும் பணி கடந்த 5 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது.
அனைத்து பணிகளும் நிறைவடைந்த நிலையில், பேரளத்தில் இருந்து திருநள்ளாறு வழியாகக் காரைக்காலுக்கு அதிவேகமாக ரயில் இயக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது.
சுமார் 90 முதல் 120 கிலோ மீட்டர் வேகத்தில் ரயிலை இயக்கி சோதனை மேற்கொள்ளப்பட்டது. சோதனை ஓட்டம் வெற்றியடைந்ததால், ரயில் சேவை அடுத்த மாதம் தொடங்கப்படும் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.