கோவை மாவட்டம் சூலூர் அருகே, நொய்யல் ஆற்றில் ரசாயனம் கலந்து நுரை பொங்குவதால் அந்த பகுதி முழுவதும் கடுமையான நெடியுடன் துர்நாற்றம் வீசுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
குழந்தைகள், முதியவர்கள் என பல்வேறு தரப்பினரும் மூச்சுத்திணறல் உள்ளிட்ட உடல்நலப் பாதிப்புகளை எதிர்கொள்வதாகவும் கூறப்படுகிறது. ரசாயனம் கலந்த நீரைப் பருகுவதால் கால்நடைகளும் பாதிக்கப்படுவதாகப் பொதுமக்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.