திக்வேஷ் சிங் மற்றும் அபிஷேக் சர்மா இடையேயான வாக்குவாதத்திற்காக திக்வேஷ் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகளுக்கிடையிலான போட்டியில், திக்வேஷ் சிங் மற்றும் அபிஷேக் சர்மா ஆகியோருக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இந்த நிலையில் லக்னோ அணி, குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் விளையாடும் அடுத்த போட்டியில் திக்வேஷ் சிங் ஐபிஎல் நிர்வாகத்தால் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
மேலும் அவருக்குப் போட்டியின் ஊதியத்திலிருந்து 50 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.