ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து விளக்க எம்.பி-க்கள் குழு ஜப்பான் புறப்பட்டது.
பஹல்காம் தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து, பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டை உலக நாடுகளுக்கு எடுத்துரைக்க, அனைத்து கட்சி எம்.பி-க்கள் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
அனைத்து கட்சிகளை சேர்ந்த 52 எம்.பி-க்கள், பல்வேறு நாடுகளுக்கும் சென்று பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டை விளக்கவுள்ளனர்.
அதன்படி, முதல் பயணத்தைத் தொடங்கியுள்ள எம்.பி-க்கள் குழு ஜப்பான் புறப்பட்டது. திமுக எம்.பி. கனிமொழி தலைமையிலான குழு ரஷ்யா, ஸ்பெயின், கிரீஸ், ஸ்லோவேனியா, லாட்வியா ஆகிய நாடுகளுக்கு நாளை பயணத்தைத் தொடங்கவுள்ளது. ஜூன் 7-ஆம் தேதியுடன் இந்தப் பயணம் நிறைவடையவுள்ளது குறிப்பிடத்தக்கது.