தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அனல்மின் நிலையத்தில் 13 ஆயிரத்து 77 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 660 மெகா வாட் கொண்ட 2 அலகுகள் அமைக்கும் பணியை, மத்திய அரசின் கிராம மின் பகிர்மான கழக தலைவர் நாராயணன் திருப்பதி, நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், இந்த மின் திட்டமானது ஒரு மிகப்பெரிய வரப்பிரசாதமாக தமிழகத்திற்கு அமைய விருப்பதாகக் கூறினார். தமிழகத்தில் மின் கட்டண உயர்வு என்பது மாநில அரசு எடுக்கக் கூடிய முடிவென்றும், அனுமானத்தின் அடிப்படையில் எதுவும் சொல்ல முடியாதெனவும் தெரிவித்தார்.