கோவை அருகே உடல்நலம் பாதிக்கப்பட்ட யானை உயிரிழந்த நிலையில், யானை கருவுற்றிருப்பதே தெரியாமல் மருத்துவக்குழு சிகிச்சை மேற்கொண்டிருப்பது பிரேதப் பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
கோவை மருத மலை அருகே கடந்த 17ஆம் தேதி நோய்வாய்ப்பட்டு தனது குட்டியுடன் ஒரு பெண் யானை மயங்கிய நிலையிலிருந்ததது. அதற்கு மூன்று நாட்களாக வனத்துறையினர் தொடர் சிகிச்சை அளித்து வந்தனர்.
இந்நிலையில் நேற்றைய தினம் ஹைட்ரோ தெரபி சிகிச்சை வழங்குவதாகக் கூறி யானையைக் குழிக்குள் இறக்கி நீரை ஊற்றி சிகிச்சை அளித்தனர்.
ஆனால், சிறிது நேரத்திலேயே அந்த யானை உயிரிழந்தது. இந்த சூழலில், யானையின் உடலைப் பிரேத பரிசோதனை செய்த போது வயிற்றில் 15 மாத குட்டி யானை இருந்தது தெரியவந்தது.
யானை கருவுற்றிருப்பது கூட தெரியாமல் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.