பாஞ்சாபில் பாகிஸ்தான் உளவு அமைப்புடன் தொடர்பிலிருந்ததாக மேலும் 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையைத் தொடர்ந்து நாடு முழுவதும் பாகிஸ்தானுக்கு ஆதரவாகச் செயல்பட்டு வந்த நபர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து பாகிஸ்தானின் உளவு அமைப்புடன் தொடர்புடைய 13 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், ஐ.எஸ்.ஐ-ன் கீழ் செயல்படும் பி.கே.ஐ என்ற பயங்கரவாத அமைப்பின் நேரடி அறிவுறுத்தல்களின் பேரில் செயல்பட்டு வந்த மேலும் 6 பேரை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.