சேலத்தில் உள்ளூர் விளைச்சல் இல்லாததால் சின்ன வெங்காயத்தின் விலை உச்சம் தொட்டுள்ளது
.சேலம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலிருந்து கொண்டுவரப்படும் சின்ன வெங்காயம் லீ பஜார் வர்த்தக மண்டியில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
டந்த சில நாட்களாகச் சின்ன வெங்காயத்தின் வரத்து சரிந்ததால், மைசூரிலிருந்து கொண்டுவரப்படும் சின்ன வெங்காயம் விற்பனை செய்யப்படுகின்றன.
இந்நிலையில், உள்ளூர் விளைச்சல் இல்லாததால் சின்ன வெங்காயத்தின் விலை உச்சத்தைத் தொட்டுள்ளது. கடந்த வாரம் வரை சில்லறை விலையில் கிலோ 30 ரூபாய்க்கு விற்ற சின்ன வெங்காயம் 60 ரூபாயாக உயர்ந்துள்ளதாகவும், மொத்த விலையில் 40 ரூபாய் வரை உயர்ந்து விற்பனை செய்யப்படுவதாகவும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
சின்ன வெங்காயத்தின் விலை உச்சத்தைத் தொட்டுள்ள நிலையில், வடமாநிலங்களிலிருந்து பெரிய வெங்காயத்தின் வருகை அதிகரித்தால் அதன் விலை சரிந்துள்ளது.
கடந்த வாரம் வரை கிலோ 40 ரூபாய் வரை பெரிய வெங்காயம், தற்போது 25 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாக வியாபாரிகள் கூறியுள்ளனர்.