ஜூனியர் என்.டி.ஆரின் பிறந்தநாளை ஒட்டி வார் 2 படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.
ஜூனியர் என்.டி.ஆர் தற்போது பாலிவுட்டில் ‘வார் 2’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகும் அவர் இன்று தனது 42வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.
அதனையொட்டி ‘வார் 2’ படத்தின் டீசர் வெளியாகி வைரலாகி வருகிறது. மேலும், என்.டி.ஆருக்கு திரைப்பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.