தமிழகம் முழுவதும் உள்ள கல்குவாரிகளை ஆய்வு செய்ய கனிமவளத்துக்குத் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகேயுள்ள செயல்படும் கல்குவாரியில் ஏற்பட்ட விபத்தில் 5 தொழிலாளர்கள் பலியாகினர்.
இதனை தொடர்ந்து குவாரிகளை ஆய்வு செய்யக் கனிம வரித்துறைக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. பாதுகாப்பு நடைமுறைகளை குவாரிகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என்றும், விதிகள் அனைத்தும் முறையாகக் கடைப்பிடிக்கப்படுகிறதா எனவும் ஆய்வு செய்யவும் ஆணையிட்டுள்ளது.