காசாவில் அடுத்த 48 மணி நேரத்தில் 14000 குழந்தைகள் இறக்க வாய்ப்புள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
அடுத்த 48 மணி நேரத்திற்குள் கூடுதல் அவசர உதவி நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால் இந்த சோக சம்பவம் நிகழ வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.
கடந்த 11 வாரங்களாக காசாவுக்குள் செல்லும் அனைத்து உதவிப்பொருட்களையும் இஸ்ரேல் நிறுத்திவைத்தது.
கனடா, பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து போன்ற நட்பு நாடுகளின் அழுத்தத்தின் கீழ், குறைந்த அளவிலான உதவிப்பொருட்களை மட்டுமே காசாவுக்குள் கொண்டு செல்ல இஸ்ரேல் அனுமதித்தது குறிப்பிடத்தக்கது.