மாதம் 40 லட்ச ரூபாய் ஜீவனாம்சம் கோரிய ஆர்த்தியின் மனுவுக்கு நடிகர் ரவி மோகன் பதிலளிக்கச் சென்னை குடும்ப நல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடிகர் ரவி மோகன், தனது மனைவி ஆர்த்தியைப் பிரிவதாகக் கடந்த ஆண்டு அறிவித்ததுடன், விவாகரத்து கேட்டு சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கானது சென்னை குடும்பநல நீதிமன்ற நீதிபதி தேன்மொழி முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது.
விசாரணைக்கு ஆஜரான நடிகர் ரவி மோகன், ஆர்த்தியுடன் வாழ விருப்பமில்லை என்றும் விவாகரத்து பெற்றுத்தர வேண்டுமெனவும் மனுத்தாக்கல் செய்தார்.
இதையடுத்து ஆர்த்தி தரப்பிலிருந்து மாதம் 40 லட்சம் ரூபாய் ஜீவனாம்சம் கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
மனுக்களைப் பெற்றுக்கொண்ட நீதிபதி, ஆர்த்தியின் மனுவுக்கு நடிகர் ரவி மோகன் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஜூன் 12 ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.