காதல் தம்பதியரைக் கடத்திய வழக்கில் சாட்சிகள் அனைத்தும் பிறழ் சாட்சியாக மாறியதால் யுவராஜ் உட்பட 3 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.
கடந்த 2013ம் ஆண்டு, திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஹேமலதா, பாலாஜி என்பவரைக் காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், இருவரையும் தீரன் சின்னமலை கவுண்டர் பேரவைத் தலைவர் யுவராஜ் உட்பட 3 பேர் காரில் கடத்தினர்.
இதுகுறித்து ஹேமலதா புகாரளித்த நிலையில், இதுதொடர்பான விசாரணை ஈரோடு மகளிர் நீதிமன்றத்தில் 12 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. இன்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்த போது, குற்றம் சாட்டப்பட்ட யுவராஜ் உட்பட 3 பேருக்கும் எதிரான சாட்சிகள் அனைத்தும் பிறழ் சாட்சியாக மாறின.
இதனால் யுவராஜ் உட்பட 3 பேரையும் விடுதலை செய்து நீதிபதி ஸ்வர்ணகுமார் உத்தரவிட்டார்.