லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத இயக்கத்தை உருவாக்கியவர்களில் ஒருவரான அமீர் ஹம்சா, காயத்துடன் சிகிச்சை பெற்று வருவதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் லஷ்கர் பயங்கரவாத இயக்கத்தை நிறுவிய 17 பேரில் அமீர் ஹம்சாவும் ஒருவர் . இவர் பல்வேறு பயங்கரவாத தாக்குதல் சம்பவங்களுக்கு மூளையாகச் செயல்பட்டவர்.
இந்நிலையில் அமீர் ஹம்சா லாகூரில் உள்ள தனது வீட்டிலிருந்து குண்டுக் காயத்துடன் கொண்டு செல்லப்பட்டு லாகூர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
அவருக்குப் பாகிஸ்தான் ராணுவ உளவு அமைப்பான ஐஎஸ்ஐ பாதுகாப்புடன் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.