தெலங்கானா மாநிலம் ரங்கார ரெட்டி மாவட்டத்தில் உள்ள ஹயத்நகர்-குண்டலூர் சாலையில் சரக்கு வாகனம் மீது கார் மோதி விபத்திற்குள்ளானது.
இந்த விபத்தில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் மேலும் இரண்டு பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். விபத்து தொடர்பான பதற வைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.