செங்கல்பட்டு சுங்கச்சாவடி அருகே லாரியை கடத்திய நபர் செல்போன் கடை ஊழியரிடம் தகராறில் ஈடுபடும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
செங்கல்பட்டு அடுத்த பரனூர் சுங்கச்சாவடியில் நின்றுகொண்டிருந்த லாரியை சுபாஷ் என்ற நபர் கடத்திச் சென்றார். இதையடுத்து லாரியை துரத்திச் சென்ற காவலர்கள் லாரியை மீட்டதுடன் சுபாஷை கைது செய்தனர்.
இந்த நிலையில், கோயம்பேட்டில் உள்ள செல்போன் கடைக்கு கடந்த 15-ம் தேதி சென்ற சுபாஷ், கடை ஊழியரைத் தாக்கியதுடன், கடையில் உள்ள பொருட்களையும் உடைத்துச் சேதப்படுத்தினார். இதுதொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி வைரலாகி வருகிறது.