டெல்லியில் இருந்து ஸ்ரீநகர் புறப்பட்ட இண்டிகோ விமானத்தின் முன்பகுதி ஆலங்கட்டி மழை மற்றும் பலத்த காற்றால் சேதமடைந்தது.
டெல்லியில் இருந்து ஸ்ரீநகர் புறப்பட்ட இண்டிகோ பயணிகள் விமானம் நடு வானில் பறந் து கொண்டிருந்தபோது ஆலங்கட்டி மழையில் சிக்கியது. பலத்த காற்றுடன் பெய்த ஆலங்கட்டி மழை காரணமாக நடுவானில் விமானம் குலுங்கியது.
இதனால் பயணிகள் அச்சமடைந்து அலறினர். நல்வாய்ப்பாக விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டதால் பயணிகள் உயிர் தப்பினர்.
விமானியின் சாமர்த்தியத்தால் 227 பயணிகளுடன் விமானம் பாதுகாப்பாக ஸ்ரீநகரில் தரையிரக்கப்பட்டது. ஆலங்கட்டி மழை பெய்த போது விமானத்தின் முகப்பு பகுதி சேதமடைந்தது.