சீனாவின் அன்ஹுய் மாகாணத்தில் உள்ள 650 ஆண்டுகள் பழமையான ஃபெங்யாங் டிரம் கோபுரத்தின் கூரை இடிந்து விழுந்தது.
கோபுரத்தின் கூரை இடிந்து விழுந்த சமயத்தில் அங்கிருந்த சுற்றுலாப் பயணிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். நல்வாய்ப்பாக இந்த விபத்தில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்ப்படவில்லை.
கோபுரத்தின் கூரை இடிந்து விழுந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது. 1375 ஆம் ஆண்டில் மிங் வம்ச ஆட்சியின்போது இந்த கோபுரம் கட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.