தேனி மாவட்டத்தில் முன்கூட்டியே தொடங்கிய தென்மேற்கு பருவக்காற்றின் வேகம் காரணமாகக் காற்றாலைகளில் மின் உற்பத்தி அதிகரித்துள்ளது.
தேனி மாவட்டத்தில் 400க்கும் மேற்பட்ட காற்றாலைகள் செயல்பட்டு வரும் நிலையில், மே மாத இறுதியில் தொடங்கும் தென்மேற்கு பருவக்காற்று கடந்த 14ஆம் தேதி முதல் வீசத் தொடங்கியது. காற்றின் வேகம் 5 மீட்டரில் இருந்து 10 மீட்டராக அதிகரித்துள்ளதால் காற்றாலை மின் உற்பத்தி உயர்ந்துள்ளது.
குறிப்பாக ஆண்டிப்பட்டி, காமாட்சிபுரம் சுற்றுவட்டாரப் பகுதியில் காற்றின் வேகம் அதிகமாக உள்ளதாகவும், தினசரி மின்உற்பத்தி 20 ஆயிரம் யூனிட் அளவுக்கு உயர்ந்துள்ளதாகவும் காற்றாலை பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.