திருவெற்றியூர் தியாகராஜ சுவாமி வடிவுடையம்மன் கோயிலில், கர்நாடகாவின் 72வது பீடாதிபதி ஸ்ரீஸ்ரீ அபினவ சங்கர பாரதி சுவாமிகள் வழிபாடு செய்தார்.
சென்னையில் 3 நாட்கள் பயணம் மேற்கொண்டுள்ள அவர், தியாகராஜ சுவாமி கோயிலுக்கு விஜயம் செய்தார். அவருக்குக் கோயில் நிர்வாகம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
முதலில் தியாகராஜ சுவாமி சன்னதியில் சாமி தரிசனம் செய்த பீடாதிபதி, பின்னர் வடிவுடையம்மன் மற்றும் பைரவர் சன்னதிகளில் சிறப்பு வழிபாடு நடத்தினர்.
தொடர்ந்து வசந்த மண்டபத்தில் பீடாதிபதிக்கு கோயில் அர்ச்சகர்கள் சிறப்பு மரியாதை செய்தனர். அப்போது, கோயிலுக்கு வந்த பக்தர்கள் பீடாதிபதியிடம் அருள் ஆசி பெற்றுச் சென்றனர்.