யமஹா நிறுவனம் விரைவில் ரிவர் இண்டியை அடிப்படையாகக் கொண்ட மலிவு விலை எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பிரிவில் புத்தம் புதிய மாடலை அறிமுகம் செய்ய உள்ளது.
வரவிருக்கும் யமஹா EV ஆனது RY01 என்ற குறியீட்டுப் பெயரைக் கொண்டுள்ளது. மேலும் இது ரிவர் இண்டியின் அதே பேட்டரி மேலாண்மை அமைப்பு மற்றும் பவர்டிரெய்னைப் பயன்படுத்தும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
புதிய யமஹா RY01 எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பண்டிகை காலத்தில் உற்பத்தியாகும் என்றும், இந்த ஆண்டு இறுதிக்குள் அறிமுகப்படுத்தப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய EV இந்தியா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் உள்ள யமஹாவின் உலகளாவிய பொறியியல் குழுக்களால் உருவாக்கப்பட்டு வருகிறது.