அமெரிக்காவின் GOLDEN DOME : அதிநவீன வான்வெளி ஏவுகணை பாதுகாப்பு!
Sep 12, 2026, 01:10 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

அமெரிக்காவின் GOLDEN DOME : அதிநவீன வான்வெளி ஏவுகணை பாதுகாப்பு!

Murugesan M by Murugesan M
May 24, 2025, 08:15 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சீனா மற்றும் ரஷ்யாவின் பாதுகாப்பு அச்சுறுத்தல்களிலிருந்து நாட்டைப் பாதுகாக்க, (Golden Dome)’கோல்டன் டோம்’ எனப்படும் 175 பில்லியன் டாலர் மதிப்பிலான ஏவுகணை பாதுகாப்பு அமைப்புக்கான திட்டங்களை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார். அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

ஒரு நாட்டின் இராணுவத் திறன்களில் ஏவுகணைப் பாதுகாப்பு அமைப்புக்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. இராணுவ விமானத்தின் பூஸ்ட் மிட்கோர்ஸ் டெர்மினல் என பல்வேறு நிலைகளில்  உள்வரும் பாலிஸ்டிக் ஏவுகணைகளைக் கண்டறிந்து கண்காணித்து இடைமறித்து அழிப்பதற்காகப் பாதுகாப்பு அமைப்புகளை ஒவ்வொரு நாடும் உருவாக்கி வருகின்றன. இந்த பாதுகாப்பு அமைப்புகள் ஒன்றோடு ஒன்று இணைக்கப் பட்ட பல அடுக்குகளைக் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல் உருவாக்கியுள்ள IRON DOME உலக அளவில் சிறந்த பாதுகாப்பு அமைப்பாகக் கருதப் படுகிறது. இஸ்ரேல் மீது ஈரான் ஏவிய 100க்கும் மேற்பட்ட ஏவுகணைகளில் பெரும்பாலானவற்றை இஸ்ரேலின்  IRON DOME இடைமறித்து அழித்துள்ளது.  அதற்கு முன் 20 நிமிடங்களில் ஹமாஸ் பயங்கரவாதிகள் ஏவிய 5000க்கும் மேற்பட்ட ராக்கெட்களையும் தடுத்து நிறுத்தி, லட்சக்கணக்கான மக்களைக் காப்பாற்றியுள்ளது.

கடந்த மார்ச் மாதம், அமெரிக்க நாடாளுமன்றத்தில் உரையாற்றிய ட்ரம்ப், இஸ்ரேலின் புகழ்பெற்ற IRON DOME -க்கு போட்டியாக ஒரு பாதுகாப்பு அமைப்பை, அமெரிக்கா உருவாக்கும் என்று கூறியிருந்தார்.

(Golden Dome) கோல்டன் டோம் என்பது அடுத்த தலைமுறை ஏவுகணை பாதுகாப்புத் திட்டமாகும். இது தரை, கடல் மற்றும் விண்வெளி அடிப்படையிலான ஏவுகணை பாதுகாப்பு அமைப்பாகும். அமெரிக்க நிலப்பரப்பை மேம்பட்ட மற்றும் வேகமாக வளர்ந்து வரும் வான்வழி அச்சுறுத்தல்களிலிருந்து பாதுகாப்பது இதன் நோக்கமாகும்.

பாலிஸ்டிக் ஏவுகணை பாதுகாப்பு (BMD) மீது முக்கியமாக கவனம் செலுத்தும் பழைய அமைப்புகளைப் போலல்லாமல், கோல்டன் டோம் ஹைப்பர்சோனிக் கிளைடு வாகனங்கள் (HGVs), குரூஸ் ஏவுகணைகள் மற்றும் AI- பொருத்தப்பட்ட ட்ரோன்களின் பெரிய ஏவுகணை கூட்டங்களைக் கண்டறிந்து தடுக்கும் என்று கூறப்பட்டுள்ளது. பரந்த ஒருங்கிணைந்த வான் மற்றும் ஏவுகணை பாதுகாப்பு (IAMD) திட்டமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஏவப்பட்ட சிறிது நேரத்திலேயே எதிரி ஏவுகணைகளை குறிவைக்கும் கண்காணிப்பு செயற்கைக்கோள்கள் மற்றும் இடைமறிப்பு செயற்கைக்கோள்கள் இரண்டையும் உள்ளடக்கியதாக(Golden Dome) ‘கோல்டன் டோம்’   திட்டமிடப்பட்டுள்ளது.

அதாவது, கோல்டன் டோமின் மையத்தில், உயர் தொழில்நுட்ப கண்டறிதல் சென்சார்கள், கண்காணிப்பு கருவிகள், இடைமறிப்பு ஏவுகணைகள் மற்றும் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு நெட்வொர்க்குகள் போன்ற பல கருவிகள் இணைக்கப்பட்ட நெட்வொர்க்காக (Golden Dome) கோல்டன் டோம் செயல்படும். பாதுகாப்பு அமைப்பின் ஒவ்வொரு கூறுகளும் ஆட்டோமேட்டிக் முறையில் அச்சுறுத்தல்களைத் தடுப்பதற்கான நிகழ்நேரத்தில் தகவல்களைப் பரிமாறிக்கொள்கிறது.

(Golden Dome)’கோல்டன் டோம்’ திட்டத்துக்கான தொடக்க உத்தரவில், கடந்த ஜனவரி மாதம் கையெழுத்திட்ட ட்ரம்ப், தனது பதவிக்காலம் முடிவதற்குள், ‘கோல்டன் டோம்’ லட்சியத் திட்டம் முடிக்கப்பட வேண்டும் என்று  கூறியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கோல்டன் டோமின் ஏவுகணைகள், சென்சார்கள் மற்றும் செயற்கைக்கோள்கள் உள்ளிட்ட கூறுகளைச் சோதித்துப் பார்த்து உறுதிப்படுத்தும் நடவடிக்கையில் பென்டகன் இறங்கியுள்ளது.

இந்த திட்டத்தில் பங்குபெற ( Palantir ) பலந்திர் மற்றும் (Anduril ) அந்துரில்  ஆகிய நிறுவனங்களுடன் எலான் மஸ்க்கின்  SpaceX  நிறுவனமும் விருப்பம் தெரிவித்துள்ளது.   சர்வதேச நாடுகளை நிலைகுலைய வைப்பதோடு,பூமியையே “போர்க்களமாக” மாற்றும் அபாயம் இருப்பதாக  கோல்டன் டோம் திட்டம் குறித்து ரஷ்யாவும் சீனாவும் ஒரே குரலில் கருத்து தெரிவித்துள்ளன.

ஹைப்பர்சோனிக் வேகத்தில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை (ICBM) ரஷ்யாவும் சீனாவும் வைத்துள்ள நிலையில், (Golden Dome) ‘கோல்டன் டோம்’   திட்டம் அவசியம் என்று ட்ரம்ப்  தெரிவித்துள்ளார்.

Tags: வான்வெளி ஏவுகணை பாதுகாப்புamericausaspaceAmerica's GOLDEN DOME: State-of-the-art space missile defenseஅமெரிக்காவின் GOLDEN DOME
Share
Tweet
SendShare
Previous Post

ஹார்வர்ட் Vs ட்ரம்ப் : சர்வதேச மாணவர்கள் சேர்க்கைக்கு செக்!

Next Post

கேள்விக்குறியான வாழ்வாதாரம் : நத்தை வேகத்தில் நடக்கும் மேம்பால பணியால் தவிப்பு!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

5 ஈரான் எண்ணெய் கப்பல்களை தாக்கி அழித்த அமெரிக்கா – மீண்டும் உக்கிரமடையும் தாக்குதல் – சிறப்பு தொகுப்பு!

பிரிக்ஸ் உச்சி மாநாடு : சீனாவுடன் வர்த்தக உறவை மேம்படுத்தும் முயற்சியில் இந்தியா தீவிரம் – சிறப்பு தொகுப்பு!

குடியரசு கட்சி வெற்றி பெற்றால் 5000 டாலர் – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உறுதி!

நேபாள பெருவெள்ளத்தால் சிதைந்த சீனாவின் BRI ரயில் திட்டம் : பேராசைக்கு முற்றுப்புள்ளி – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies