எதிர்கட்சிகளின் அராஜகத்திலிருந்து இந்தியாவை காப்பாற்றுங்கள் : எச்சரிக்கும் இந்திய வம்சாவளி அறிஞர்கள் - சிறப்பு தொகுப்பு!
Oct 25, 2026, 05:29 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

எதிர்கட்சிகளின் அராஜகத்திலிருந்து இந்தியாவை காப்பாற்றுங்கள் : எச்சரிக்கும் இந்திய வம்சாவளி அறிஞர்கள் – சிறப்பு தொகுப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Oct 23, 2026, 07:30 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மத்திய தேர்தல் ஆணையத்துக்கு எதிரான போராட்டங்கள், நாட்டின் ஜனநாயக அமைப்புகளின் மீதான மக்களின் நம்பிக்கையை பலவீனப்படுத்தும் என்று 27 நாடுகளைச் சேர்ந்த 400-க்கும் மேற்பட்ட இந்திய வம்சாவளி அறிஞர்கள் எச்சரித்துள்ளனர். அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு..

2025–2026ம் ஆண்டில் மத்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியல்களில் நாடு தழுவிய சிறப்பு தீவிர திருத்தத்துக்கு உத்தரவிட்டது. நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் செய்ததில் கோடிக்கணக்கான வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டதாகவும், இது ஆளும் பாஜக-வுக்கு சாதகமாகச் செய்யப்பட்டதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.

இதையடுத்து டெல்லியில் நாடாளுமன்றத்திலிருந்து தேர்தல் ஆணைய அலுவலகம் மற்றும் உச்ச நீதிமன்றம் வரை பேரணிகள் நடத்தப்பட்டன.

குறிப்பாக மத்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி தலைநகர் டெல்லியில் காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணி எதிர்க்கட்சிகள் தீவிரப் போராட்டங்களில் ஈடுபட்டன .

இந்நிலையில் மத்திய தேர்தல் ஆணையத்துக்கு எதிராக எதிர்க்கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் நடத்தி வரும் போராட்டங்களைக் கண்டித்து, அமெரிக்கா, பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியா, ஜெர்மனி, பிரான்ஸ், ஜப்பான் மற்றும் சிங்கப்பூர் உள்ளிட்ட உலகின் 27 நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த 400-க்கும் மேற்பட்ட இந்திய வம்சாவளி மாணவர்கள், பேராசிரியர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் Spare India From Anarchy அதாவது இந்தியாவை அராஜகத்திலிருந்து காப்பாற்றுங்கள் என்ற தலைப்பில் ஒரு கூட்டு அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.

மத்திய தேர்தல் ஆணையம் போன்ற அரசியலமைப்பு சார்ந்த நிறுவனங்களுக்கு எதிராக வீதிகளில் இறங்கிப் போராடுவது, ஜனநாயக செயல்முறைகளின் மீதான மக்களின் நம்பிக்கையை சீர்குலைத்து விடும் என்று தெரிவித்துள்ளனர்.

ஹார்வர்ட், ஸ்டான்போர்ட், ஆக்ஸ்போர்ட், கேம்பிரிட்ஜ் மற்றும் எம்.ஐ.டி (MIT) போன்ற உலகின் முன்னணி கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த அறிஞர்கள் கையெழுத்திட்டுள்ள இந்த அறிக்கையில் நீதிமன்றங்களின் பரிசீலனையில் இருக்கும் விவகாரங்களை ஆயுதமாகப் பயன்படுத்தி, திட்டமிட்ட முறையில் இந்திய ஜனநாயகம் குறித்து சந்தேக விதைகளை விதைக்க சிலர் முயற்சி செய்வதாக குற்றம்சாட்டப் பட்டுள்ளது.

மேலும் மத்திய தேர்தல் ஆணையம், அமைதியான அதிகாரப் பரிமாற்றங்கள் ஆகியவை முக்கியப் பங்காற்றியதன் மூலம், சுதந்திரத்திற்குப் பிறகு இந்தியாவின் ஜனநாயக அமைப்பு மீள்திறனைக் காட்டியுள்ளது என்று குறிப்பிட்டுள்ளனர்.

தங்களுக்குச் சாதகமற்ற தேர்தல் முடிவுகள் காரணமாகவே தேர்தல் செயல்முறைகளின் நேர்மை குறித்த கேள்விகளை எதிர்க்கட்சிகள் முன்வைப்பதாகவும், அது போலவே தங்களுக்குச் சாதகமற்ற நீதிமன்றத் தீர்ப்புகள் காரணமாகவே நீதித்துறையின் மீதும் எதிர்க்கட்சிகள் விமர்சனங்கள் வைப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

தேர்தல்கள் தொடர்பான கருத்து வேறுபாடுகளை நிறுவப்பட்ட அரசியலமைப்பு செயல்முறைகள் மூலமே தீர்க்கப்பட வேண்டும் என்றும், அரசியல் கருத்து வேறுபாடுகளைத் தீர்ப்பதற்கு நாடாளுமன்ற விவாதம், உரையாடல் மற்றும் அரசியலமைப்புச் சட்ட செயல்முறைகளே முதன்மை வழிகளாகத் தொடர வேண்டும் என்றும் கூறியுள்ள இந்திய வம்சாவளி அறிஞர்கள், அதற்கு மாறாக வீதிகளில் முன்னெடுக்கும் போராட்டங்களும், பேரணிகளும், அரசிலமைப்பைக் காக்கும் தேர்தல் ஆணையம் போன்ற நிறுவனங்களைப் பலவீனப்படுத்தும் என்று எச்சரித்துள்ளனர்.

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரியும், வாக்காளர் பட்டியல் திருத்தத்தில் (SIR) முறைகேடுகள் நடப்பதாகக் குற்றம்சாட்டியும், காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகள் மற்றும் கரப்பான் பூச்சி கட்சியினர் போராட்டங்களை நடத்திய நிலையில் இந்த உலகளாவிய இந்திய வம்சாவளி அறிஞர்களின் எதிர்ப்பு அறிக்கை வெளியாகியுள்ளது.

 

Tags: intensive special revision of the electoral rolls.election commission of indianation’s democratic institutions.protests against the Election Commission of India400 scholars of Indian origin
Share
Tweet
SendShare
Previous Post

தமிழகத்திற்கு விநாடிக்கு 3000 கன அடி நீர் திறக்க வேண்டும் – காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவு!

Next Post

மேற்காசிய போருக்கு முடிவு எப்போது? அடிபணிய மறுக்கும் ஈரான் – சிறப்பு தொகுப்பு!

Related News

நீலகிரியில் பெய்து வரும் கனமழை; வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்

நீலகிரி மண் சரிவில் சிக்கிய கேரள மாணவர்கள்; பத்திரமாக மீட்பு

நெருங்கும் அர்னாப் புயல்; 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

ஐரோப்பாவை சீர்குலைத்த போராட்டம் : உலகளாவிய நெட்வொர்க்கின் அதிர்ச்சி பின்னணி – சிறப்பு தொகுப்பு!

மேட்டுப்பாளையம் – உதகை சாலையில் மண்சரிவில் சிக்கிய அரசுப்பேருந்து – ஓட்டுநர் பலி!

மோட்டார் வாகன விதிகளில் திருத்தம் – புதிய டிரைவிங் லைசென்ஸ் நடைமுறைகளை அறிவித்தது மத்திய அரசு!

Load More

அண்மைச் செய்திகள்

நீலகிரி மாவட்டத்தில் கொட்டி தீர்த்த மழை : பல்வேறு இடங்களில் மண் சரிவு : போக்குவரத்து பாதிப்பு!

கொடைக்கானல் மலைப்பகுதியில் கொட்டி தீர்த்த மழை – வெள்ளி நீர்வீழ்ச்சியில் வெள்ளம்!

அரசு பணியாளர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் – தமிழக அரசு உத்தரவு!

சிங்கப்பூர் செல்ல முயன்ற ஜெம் வீரமணி மகள் கைது – சிறப்பு புலனாய்வுப் பிரிவு போலீசார் நடவடிக்கை!

40 வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை – UPI மூலம் ரூ.1.5 கோடி பரிமாற்றம் நடைபெற்றதும் கண்டுபிடிப்பு!

அருணாச்சல பிரதேச எல்லையில் பதற்றம் – ITBP தலைமை இயக்குநர் சத்ருஜீத் கபூர் தகவல்!

ஆசிய பாரா விளையாட்டு போட்டியில் 3 பதக்கம் வென்ற துளசிமதி முருகேசனுக்கு 1.25 கோடி ஊக்கத்தொகை – முதலமைச்சர் விஜய் அறிவிப்பு!

மேற்காசிய போருக்கு முடிவு எப்போது? அடிபணிய மறுக்கும் ஈரான் – சிறப்பு தொகுப்பு!

எதிர்கட்சிகளின் அராஜகத்திலிருந்து இந்தியாவை காப்பாற்றுங்கள் : எச்சரிக்கும் இந்திய வம்சாவளி அறிஞர்கள் – சிறப்பு தொகுப்பு!

நமது கல்வி முறை இந்தியாவின் தேவைகளுக்கு ஏற்ப அமைய வேண்டும் – பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies