உலகையே திரும்பி பார்க்க வைத்த ஜாம்நகர் டீசல் : இந்தியாவை நாடும் அமெரிக்கா - சிறப்பு தொகுப்பு!
Oct 25, 2026, 06:57 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உலகையே திரும்பி பார்க்க வைத்த ஜாம்நகர் டீசல் : இந்தியாவை நாடும் அமெரிக்கா – சிறப்பு தொகுப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Oct 23, 2026, 03:40 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அமெரிக்காவில் எரிபொருள் தேவை அதிகரித்து வரும் நிலையில், குஜராத்தின் ஜாம்நகர் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது அந்நாட்டின் கவனம் விழுந்திருக்கிறது. உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு மையங்களில் ஒன்றான ஜாம்நகர் மீது அமெரிக்கா கவனம் செலுத்துவது ஏன்? விரிவாகப் பார்க்கலாம்…

உலக நாடுகளின் பொருளாதாரத்தைத் தீர்மானிப்பதில் எண்ணெய்க்கு மிக முக்கிய பங்கு இருக்கிறது. கச்சா எண்ணெய் கிடைத்தால் மட்டும் போதுமானது அல்ல. அதை டீசல், பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருட்களாக மாற்றுவதற்கான சுத்திகரிப்புத் திறனும் அவசியம். இதைத்தான் தற்போதைய உலக எரிசக்திச் சந்தையின் நெருக்கடி உணர்த்துகிறது.

அந்த வகையில், குஜராத் மாநிலத்தில் உள்ள ஜாம்நகர், சர்வதேச நாடுகளின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. குறிப்பாக, அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோவின் கவனம் இந்தப் பகுதியின் மீது திரும்பியிருப்பதன் பின்னணியில், எரிசக்தி வர்த்தகம் முக்கியத்துவம் பெறுகிறது.

உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்படும்போது, அதன் தாக்கம் எரிபொருள் விலையிலும் எதிரொலிக்கிறது. மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம், கடல்வழிப் போக்குவரத்தில் ஏற்படும் இடையூறு உள்ளிட்ட காரணங்களால் எண்ணெய் விநியோகம் தடைபடுகிறது.

குறிப்பாக லாரி போக்குவரத்து, விவசாய இயந்திரங்கள், கட்டுமானப் பணிகள், தொழிற்சாலைகள் என பல துறைகளும் டீசலை நம்பியிருக்கின்றன. டீசல் விலை உயர்ந்தால், போக்குவரத்துச் செலவு அதிகரிக்கும். அதன் தாக்கம் அத்தியாவசிய பொருட்களின் விலையிலும் எதிரொலிக்கும்.

அமெரிக்காவில் தற்போது டீசல் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்திருக்கிறது. இத்தகைய சூழலில், எரிபொருளை உற்பத்தி செய்யக்கூடிய திறன் கொண்ட சுத்திகரிப்பு ஆலைகள் அமெரிக்காவுக்கு தேவைப்படுகின்றன. இதைக் கருத்தில் கொண்டு ஜாம்நகர் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் சுத்திகரிப்பு ஆலையை அந்நாட்டு அமைச்சர் ரூபியோ பார்வையிட்டுள்ளார்…

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தால் இயக்கப்படும் இந்த வளாகம், நாளொன்றுக்கு சுமார் 14 லட்சம் பேரல் கச்சா எண்ணெயைச் சுத்திகரிக்கும் திறன் கொண்டது. உலகின் மிகப்பெரிய, ஒரே இடத்திலுள்ள எண்ணெய் சுத்திகரிப்பு வளாகமும் இதுதான்…

பல்வேறு வகையான கச்சா எண்ணெயைச் சுத்திகரிக்கும் தொழில்நுட்ப வசதிகளையும் இந்த வளாகம் கொண்டுள்ளது. குறிப்பாக, வெனிசுலாவில் இருந்து கிடைக்கும் கனமான கச்சா எண்ணெயைச் சுத்திகரிப்பதற்கான திறனும் இங்கு இருக்கிறது.

இதனால்தான், ஜாம்நகரின் சுத்திகரிப்புத் திறனும், உலகச் சந்தைக்குத் தேவையான எரிபொருட்களை வழங்கும் திறனும் அமெரிக்காவின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.

இந்தியா தனது தேவைக்கான கச்சா எண்ணெயின் பெரும்பகுதியை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்கிறது. அதே நேரத்தில், அதைச் சுத்திகரித்து டீசல், பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருட்களை உள்நாட்டுத் தேவைக்கும், ஏற்றுமதிக்கும் வழங்குகிறது.

இதனால், கச்சா எண்ணெயை இறக்குமதி செய்யும் நாடாக மட்டுமல்லாமல், சுத்திகரிக்கப்பட்ட எரிபொருட்களை உலகச் சந்தைக்கு வழங்கும் நாடாகவும் இந்தியா விளங்குகிறது.

சர்வதேச எரிபொருள் விநியோகத்தில் மாற்றங்கள் ஏற்படும்போது, ஜாம்நகர் போன்ற சுத்திகரிப்பு மையங்கள் இந்தியாவுக்கு புதிய வர்த்தக வாய்ப்புகளை உருவாக்கக்கூடும்.

அதே நேரத்தில், சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தால் இந்தியாவின் இறக்குமதிச் செலவும் அதிகரிக்கலாம். அதன் தாக்கம் போக்குவரத்துச் செலவு, பணவீக்கம் மற்றும் குடும்பங்களின் அன்றாடச் செலவுகளிலும் எதிரொலிக்கும்.

உலக நாடுகள் எண்ணெய்க்காகப் போட்டியிடுவதன் பின்னணியில், அரசியல் மற்றும் வர்த்தகக் கணக்குகள் மட்டுமல்லாமல், நம்மை போன்ற சாமானிய மக்களின் அன்றாட வாழ்க்கைச் செலவும் அடங்கியிருக்கிறது…

அந்த வகையில், ஜாம்நகர் என்பது ஒரு பிரம்மாண்டமான தொழிற்சாலை மட்டுமல்ல… உலக எரிசக்திச் சந்தையில் இந்தியாவின் சுத்திகரிப்புத் திறனையும், எதிர்கால வர்த்தக வாய்ப்புகளையும் வெளிப்படுத்தும் மையமாகவும் விளங்குகிறது.

ஒரு நாட்டுக்கு கச்சா எண்ணெய் வளம் பலம் என்றால், அதை உலகத்துக்குத் தேவையான எரிபொருளாக மாற்றும் திறன் இன்னொரு பலம். அந்தத் திறன்தான் இன்று உலகையே ஜாம்நகரை நோக்கித் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது…

Tags: dieselUnited StatesJamnagar.oil refinerymark rubioIndiaamericagujaratpetrol
Share
Tweet
SendShare
Previous Post

மார்கோ ரூபியோவை மும்பையில் சந்தித்த விவகாரம் – ராகுல் காந்திக்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பதிலடி!

Next Post

சாத்தான்குளம் அருகே காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் ஆத்திரம் – வீடு புகுந்து வெட்டியதில் பெண் பலி!

Related News

நீலகிரியில் பெய்து வரும் கனமழை; வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்

நீலகிரி மண் சரிவில் சிக்கிய கேரள மாணவர்கள்; பத்திரமாக மீட்பு

நெருங்கும் அர்னாப் புயல்; 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

ஐரோப்பாவை சீர்குலைத்த போராட்டம் : உலகளாவிய நெட்வொர்க்கின் அதிர்ச்சி பின்னணி – சிறப்பு தொகுப்பு!

மேட்டுப்பாளையம் – உதகை சாலையில் மண்சரிவில் சிக்கிய அரசுப்பேருந்து – ஓட்டுநர் பலி!

மோட்டார் வாகன விதிகளில் திருத்தம் – புதிய டிரைவிங் லைசென்ஸ் நடைமுறைகளை அறிவித்தது மத்திய அரசு!

Load More

அண்மைச் செய்திகள்

நீலகிரி மாவட்டத்தில் கொட்டி தீர்த்த மழை : பல்வேறு இடங்களில் மண் சரிவு : போக்குவரத்து பாதிப்பு!

கொடைக்கானல் மலைப்பகுதியில் கொட்டி தீர்த்த மழை – வெள்ளி நீர்வீழ்ச்சியில் வெள்ளம்!

அரசு பணியாளர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் – தமிழக அரசு உத்தரவு!

சிங்கப்பூர் செல்ல முயன்ற ஜெம் வீரமணி மகள் கைது – சிறப்பு புலனாய்வுப் பிரிவு போலீசார் நடவடிக்கை!

40 வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை – UPI மூலம் ரூ.1.5 கோடி பரிமாற்றம் நடைபெற்றதும் கண்டுபிடிப்பு!

அருணாச்சல பிரதேச எல்லையில் பதற்றம் – ITBP தலைமை இயக்குநர் சத்ருஜீத் கபூர் தகவல்!

ஆசிய பாரா விளையாட்டு போட்டியில் 3 பதக்கம் வென்ற துளசிமதி முருகேசனுக்கு 1.25 கோடி ஊக்கத்தொகை – முதலமைச்சர் விஜய் அறிவிப்பு!

மேற்காசிய போருக்கு முடிவு எப்போது? அடிபணிய மறுக்கும் ஈரான் – சிறப்பு தொகுப்பு!

எதிர்கட்சிகளின் அராஜகத்திலிருந்து இந்தியாவை காப்பாற்றுங்கள் : எச்சரிக்கும் இந்திய வம்சாவளி அறிஞர்கள் – சிறப்பு தொகுப்பு!

நமது கல்வி முறை இந்தியாவின் தேவைகளுக்கு ஏற்ப அமைய வேண்டும் – பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies