தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால், இளைஞர் வீடு புகுந்து அரிவாளால் வெட்டியதில், சிறுமியின் தாய் பரிதாபமாக உயிரிழந்தார்.
முதலூர் கிராமத்தில் அதிகாலை முத்துக்கிருஷ்ணன் என்பவர் வீட்டுக்குள் புகுந்த இளைஞர், அவரது குடும்பத்தினர் மீது அரிவாளால் சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது. இதில், முத்துக்கிருஷ்ணனின் மனைவி மேரி ரெஜிலா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும், படுகாயமடைந்த முத்துக்கிருஷ்ணன் மற்றும் அவரது 10 வயது மகன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனிடையே, காணாமல் போன முத்துக்கிருஷ்ணனின் 2 மகள்களை, செல்போன் சிக்னலை வைத்து அடைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு வீட்டில் இருந்து போலீசார் மீட்டனர்.
முதற்கட்ட விசாரணையில், முத்துக்கிருஷ்ணனின் 15 வயது மகளும், தாக்குதல் நடத்திய இளைஞரும் காதலித்து வந்தததாகவும், இதற்கு முத்துக்கிருஷ்ணன் எதிர்ப்பு தெரிவித்ததும் தெரியவந்துள்ளது. இதையடுத்து அந்த இளைஞரை போலீசார் தேடி வருகின்றன்னர்.
















