பெருங்களத்தூர், வண்டலூர் பகுதிகளில் அடுத்தடுத்து எட்டு கடைகளில் பூட்டை உடைத்து மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை தாம்பரம் அடுத்த பெருங்களத்தூர் காமராஜர் நெடுஞ்சாலையில் உள்ள செல்போன், மூக்குக் கண்ணாடி உள்ளிட்ட கடைகளின் பூட்டை உடைத்து மர்மநபர்கள் கொள்ளையடித்துள்ளனர்.
சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதேபோன்று, வண்டலூர் ஓட்டேரி பகுதியில் அடுத்தடுத்த 5 கடைகளின் பூட்டை உடைத்தும் கொள்ளையில் ஈடுபட்ட மர்மநபர்கள், சிசிடிவி கேமராக்களை உடைத்து சென்றுள்ளனர்.
இந்த கொள்ளை சம்பவங்கள் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.