ஜப்பானில் அரிசி வாங்குவது குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த, அந்நாட்டு வேளாண்துறை அமைச்சர் டகு இடொ ராஜினாமா செய்தார்.
இவர் கியூஷா தீவில் உள்ள சாஹா மாகாணத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றிருந்தார். அப்போது தான் எப்போதும் கடைக்குச் சென்று அரிசியை வாங்குவதில்லை எனவும், தனது ஆதரவாளர்கள், கட்சிக்காரர்கள் அரியைப் பரிசாகக் கொடுப்பார்கள் என்றும் பேசியிருந்தார்.
இது கடும் விமர்சனங்களைச் சந்தித்ததால், டகு ராஜினாமா செய்யாவிட்டால் அவர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்படும் என்று எதிர்க்கட்சிகள் எச்சரிக்கை விடுத்தன. அதனைத் தொடர்ந்து டகு இடோ ராஜினாமா செய்துள்ள நிலையில், தனது பேச்சுக்காக நாட்டு மக்களிடம் மன்னிப்பும் கேட்டுள்ளார்.