விழுப்புரம் மாவட்டம் அரசூர் அடுத்துள்ள மலட்டாற்றில் குளிக்கச் சென்ற 3 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மலட்டாற்றில் குளிப்பதற்காகச் சென்ற இளைஞர்கள் மற்றும் சிறுவர், சிறுமியர் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டனர். இதைக் கண்ட அப்பகுதி மக்கள், தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட 6 பேரில் 3 பேரைப் பத்திரமாக மீட்டனர்.
ஆனால் பாரதி நகரைச் சேர்ந்த சிவசங்கரி, அவரது சகோதரி அபிநயா, கடலூரைச் சேர்ந்த ராஜேஷ் ஆகிய 3 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.