நாடாளுமன்றத் தேர்தல் எதிரொலியாக கொலம்பியா விமானங்களுக்கு வெனிசுலா தடை விதித்தது.
வெனிசுலாவில் வரும் 25-ம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனைச் சீர்குலைக்கும் வகையில் நடைபெற்ற போராட்டத்தில் தூதரகங்கள் மற்றும் அரசு அலுவலகங்கள் சூறையாடப்பட்டன.
இதுதொடர்பாக கொலம்பியா, மெக்சிகோ நாடுகளைச் சேர்ந்த 17 பேர் உள்பட சுமார் 40 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் தேர்தல் முடியும்வரை கொலம்பியா விமானங்களுக்கு வெனிசுலா அரசாங்கம் தடை விதித்துள்ளது.