சத்தீஸ்கரில் துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்ட 27 நக்சல்களும் அடையாளம் காணப்பட்டதாக, அம்மாநில டிஜிபி தெரிவித்துள்ளார்.
சத்தீஷ்கர் மாநிலம் நாராயண்பூர் மாவட்டத்தில் உள்ள அபுஜ்மத் பகுதியில் அமைந்திருக்கும் வனப்பகுதியில் நக்சல்கள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் புதன்கிழமை பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது பாதுகாப்புப் படையினருக்கும், நக்சல்களுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை ஏற்பட்டது. இதில் 27 நக்சல்கள் சுட்டுக்கொல்லப்பட்டு ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன.
இந்நிலையில் துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்ட 27 நக்சல்களின் உடல்களும் அடையாளம் காணப்பட்டதாக சத்தீஷ்கர் டிஜிபி அருண் தேவ் கவுதம் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்தியாவில் 2026-ம் ஆண்டு மார்ச் 31-ம்தேதிக்குள் நக்சல் பயங்கரவாதம் ஒழிக்கப்பட வேண்டும் என்பது மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் உறுதி மொழியாகும் எனத் தெரிவித்த டிஜிபி, அதற்கு முன்பே அது சாத்தியமாக வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தார்.
முன்னதாக துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்ட 27 நக்சல்களின் உடல்களும் அடர்ந்த வனப்பகுதியில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாகக் கொண்டு வரப்பட்டது.