ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் உள்ள தால் ஏரியில், இந்திய ஆயுதப்படைகளுக்கு ஆதரவாக பாஜகவினர் படகில் சென்று பேரணி நடத்தினர்.
பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாகத் தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதலை முன்னெடுத்த இந்திய ஆயுதப்படைகளுக்கு ஆதரவாக அவ்வப்போது நாடு முழுவதும் பேரணி நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் ஸ்ரீநகரில் உள்ள தால் ஏரியில், இந்திய ஆயுதப்படைகளுக்கு ஆதரவாக பாஜகவினர் படகில் சென்று பேரணி நடத்தினர். அப்போது தேசியக் கொடிகளை கைகளில் ஏந்தியவாறு, ஆயுதப்படைகளுக்கு ஆதரவாக அவர்கள் முழக்கமிட்டனர்.