ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து விளக்கமளிக்க திமுக எம்.பி., கனிமொழி தலைமையிலான எம்பிக்கள் ரஷ்யா புறப்பட்டனர்.
பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து, ஆப்ரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கை மூலமாகப் பாகிஸ்தானிற்கு இந்தியா தக்க பதிலடி கொடுத்தது.
இதையடுத்து, இந்தியாவின் ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து உலக நாடுகளுக்கு நேரில் சென்று விவரிக்க 7 குழுக்கள் அமைக்கப்பட்டன.
இந்த நிலையில், திமுக எம்.பி., கனிமொழி தலைமையிலான எம்பிக்கள் குழுவினர் டெல்லியிலிருந்து ரஷ்யா புறப்பட்டனர். நாளை ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளைக் குழுவானது சந்திக்க உள்ளது.