ஜம்மு காஷ்மீர் மாநிலம் சிங்போரா பகுதியில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில், மீதமுள்ள தீவிரவாதிகளை வேட்டையாடும் பணியில் இந்திய ராணுவம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
பயங்கரவாத குழுக்கள் சத்ரூ வனப் பகுதிகளில் பாதுகாப்புப் படையினரின் முற்றுகைக்குள் சிக்கியிருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் சம்பவ இடத்தில் கூடுதல் படைகள் குவிக்கப்பட்டு, ஹெலிகாப்டர் மூலம் பயங்கரவாதிகளைத் தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.
மீதமுள்ள தீவிரவாதிகளை வேட்டையாடும் பணியில் இந்திய ராணுவம் தீவிரம் காட்டி வருகிறது. ஒரு வாரத்துக்கு முன்பாக, ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தின் டிரால் பகுதியில், ஜெய்ஷ் இ முகம்மது அமைப்பைச் சேர்ந்த 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது.