வயது மூப்பு காரணமாக உதகையில் காலமான அணுசக்தி ஆணையத்தின் முன்னாள் தலைவர் எம்.ஆர்.ஸ்ரீனிவாசன் உடல், அரசு மரியாதையுடன் குன்னூர் வெலிங்டன் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
30 குண்டுகள் முழங்கக் காவல் துறையினர் அரசு மரியாதை அளித்த நிலையில், அவரது இறுதிச்சடங்குகள் நடைபெற்றன. அவரது மனைவி கீதா ஸ்ரீனிவாசன், மகள் சாரதா, மகன் ரகுவீர் மற்றும் உறவினர்கள் எம்.ஆர்.ஸ்ரீனிவாசனின் இறுதிச்சடங்கில் பங்கேற்றனர்.