காசா மீதான போர் குறித்து இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பிய எம்.பி வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டார்.
காசா மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதுதொடர்பாக நாடாளுமன்றத்தில் உரையாற்றிய எதிர்க்கட்சி எம்.பி அய்மன் ஒடே, அரசியல் ஆதாயத்திற்காக இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருவதாக கூறினார்.
அவரது பேச்சுக்கு உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து அய்மன் ஒடேவை அவைக் காவலர்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றினர்.