சிங்கப்பூரின் புதிய அமைச்சரவையில் தமிழர்கள் 6 பேர் இடம் பெற்றுள்ளனர்.
சிங்கப்பூரில் நடந்த பொதுத்தேர்தலில், மொத்தம் உள்ள 97 இடங்களில், ஆளும் பிஏபி கட்சி 87 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்தது. இந்நிலையில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள புதிய அமைச்சரவையில் 6 தமிழர்களின் பெயரும் இடம்பெற்றுள்ளது.
அதன்படி, அந்நாட்டின் உள்துறை அமைச்சராக கே.சண்முகமும், வெளியுறவுத்துறை அமைச்சராக விவியன் பாலகிருஷ்ணனும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். பிரதமர் அலுவலக அமைச்சராக இந்திராணி ராஜாவும், தென்கிழக்கு மாவட்டத்தின் மேயராக தினேஷ் வாசு தாஸும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
கல்வி மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் மூத்த இணையமைச்சராக ஜனிலும், சட்டம் மற்றும் போக்குவரத்து துறையின் மூத்த துணை அமைச்சராக முரளி பிள்ளையும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
சிங்கப்பூர் அமைச்சர்கள், மூத்த துணையமைச்சர்கள், துணை அமைச்சர்கள் ஆகியோர் வெள்ளிக்கிழமை பதவியேற்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.