குன்னூர் மலை பாதையில் நிகழ்ந்த விபத்தில் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் பேத்தி பரிதாபமாக உயிரிழந்தார்.
கடந்த 20-ம் தேதி அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் பேத்தி திவ்யப்பிரியா, தனது கணவர் மற்றும் உறவினர்களுடன் உதகைக்கு சுற்றுலா சென்றிருந்தார். தொடர்ந்து அவர்கள் அனைவரும் குன்னூர் வழியாக காரில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர்.
அப்போது பிரேக் பிடிக்காதால் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரம் இருந்த பாறை மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில், திவ்யபிரியா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து சென்ற போலீசார், உடலை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
திருமணம் ஆன 3 மாதங்களில் திவ்யபிரியா உயிரிழந்தது முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.