அமலாக்கத்துறை விசாரணையை அரசியலாக பார்க்க வேண்டாம் என பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,அமலாக்கத்துறை என்பது தனி அதிகாரம் பெற்ற அமைப்பு என தெரிவித்தார். டாஸ்மாக் வழக்கில் நீதிமன்றம் தடை விதித்திருந்தாலும் சட்டம் தனது கடமையை செய்யும் என்றும் அவர் கூறினார்.
140 கோடி மக்கள் வாழ்கின்ற இந்திய திருநாட்டை அந்நிய நாட்டு தாக்குதல்களில் இருந்தும் பயங்கரவாதிகள் தாக்குதலில் இருந்தும் ராணுவ வீரர்கள் நம்மை காத்து வருகிறார்கள். அவர்களது தியாகத்திற்கு ஈடு இணை கிடையாது, எனவே அவர்களை பற்றி பேசக் கூடியவர்கள் பெற்ற தாயை பற்றி கேவலமாக பேசுவதற்கு சமமானவர்கள் என்றும் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.