அதிமுக முன்னாள் அமைச்சரும், திண்டுக்கல் சீனிவாசன் பேத்தியுமான டாக்டர் திவ்யபிரியா மறைவுக்கு தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், அதிமுக முன்னாள் அமைச்சரும், திண்டுக்கல் சீனிவாசன் பேத்தியுமான டாக்டர் திவ்யபிரியா சாலை விபத்தில் அகால மரணமடைந்த செய்தி அறிந்து மிகுந்த வருத்தமுற்றதாக தெரிவித்துள்ளார்.
பல சாதனைகள் புரிய வேண்டிய இளம் வயதிலேயே இப்படிப்பட்ட சோகம் நேர்ந்தது மனதை உலுக்குகிறது என்றும், அவரை இழந்துவாடும் குடும்பத்தினருக்கும் சுற்றத்தாருக்கும் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார்.
அன்னாரின் ஆன்மா இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாற பிரார்த்தித்துக் கொள்கிறேன் என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.