திண்டுக்கல் அருகே ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட கோயில் புறம்போக்கு நிலத்தை மீட்டுத் தர வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அழகர் நாயக்கன்பட்டி கிராமத்தில் உள்ள புறம்போக்கு நிலங்கள் மற்றும் பொது பாதையை முனியாண்டி என்பவர் ஆக்கிரமித்து விவசாயம் செய்து வருவதாகக் கூறப்படுகிறது.
இதனால் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ள கிராம மக்கள், ஆக்கிரமிப்பு நிலங்களை மாவட்ட நிர்வாகம் மீட்டுத் தர வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.