செங்கல்பட்டில் பாஜக சார்பில் தேசியக் கொடி பேரணி பிரம்மாண்டமாக நடைபெற்றது.
பாகிஸ்தானுக்கு எதிரான ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் இந்தியா பெற்ற வெற்றியைக் கொண்டாடும் வகையிலும், பிரதமர் மோடி மற்றும் முப்படை வீரர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும், செங்கல்பட்டு நகரப் பகுதியில் தேசியக்கொடி பேரணி நடைபெற்றது.
செங்கல்பட்டு வடக்கு மாவட்ட பாஜக தலைவர் ரகுராமன் தலைமையில் நடைபெற்ற பேரணியில் 30 அடி நீளமுள்ள தேசியக் கொடியுடன் பாஜகவினர் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் ஊர்வலமாகச் சென்றனர்.
செங்கல்பட்டு தலைமை தபால் நிலையத்திலிருந்து போர் நினைவுச் சின்னம் வரை சென்ற பேரணியில் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.