திருவண்ணாமலை அருகே தெருவிளக்கு எரியாததால் நரிக்குறவர் இனமக்கள் இருளில் தவித்து வருகின்றனர்.
கணந்தம்பூண்டி ஊராட்சியில் நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதியில் கடந்த ஒரு மாதமாகத் தெரு விளக்குகள் எரியவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனால் இரவு நேரங்களில் பாம்பு உள்ளிட்ட விஷ உயிரினங்கள் வருவதாக நரிக்குறவர் இனமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் கவனத்தில் கொண்டு தெருவிளக்குகள் எரிவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.