வேலூர் அருகே நடைபெற்ற எருது விடும் விழாவைப் பொதுமக்கள் உற்சாகத்துடன் கண்டு களித்தனர்.
அணைக்கட்டு அடுத்த கோவிந்த ரெட்டிபாளையம் கிராமத்தில் எருது விடும் விழா விமரிசையாக நடைபெற்றது.
இதில் நூற்றுக்கு மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டு இலக்கை நோக்கிச் சீறிப் பாய்ந்து சென்றன.
இதனைச் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் ஆரவாரத்துடன் கண்டு ரசித்தனர். இதனிடையே காளைகள் முட்டியதில் 25-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் காயம் அடைந்தனர்.